2021 மார்ச் 01, திங்கட்கிழமை

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2,500 இடைக்கால நிவாரணத் தொகை?

Kogilavani   / 2016 மே 23 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணத் தொகையாக 2,500 ரூபாயினை வழங்குவது தொடர்பில், நாளை செவ்வாய்க்கிமை (24) மாலைக்குள் பதில் வழங்குமாறு, அரசாங்கத்தினால் தோட்ட நிறுவனங்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அறிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தின் போது, நாட்டில் நிலவிய சீரற்ற வானிநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளம் தொடர்பிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பெருந்தோட்டத் தொழிற்சங்கச் சம்மேளனத்தின் சார்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன் மற்றும் தொழில் அமைச்சர், கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்க பிரதிநிதிகள், தோட்ட நிறுவன சம்மேளனப் பிரதிநிதிகள், தொழில் ஆணையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதுதொடர்பான அடுத்தகட்டக் கூட்டங்கள், இன்று திங்கட்கிழமையும் (23) நாளை செவ்வாய்க்கிழமையும் (24), அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .