Kanagaraj / 2016 ஜூலை 27 , மு.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்கான நிதியை பெற்றுக்கொள்வதற்காக பெருந்தோட்டக் கம்பனிகள், இலங்கை தேயிலை சபையுடன் கடன் ஒப்பந்தமொன்றை நேற்றுச் செவ்வாய்க்கிழமை செய்துகொண்டுள்ளன.
ஜூன், ஜூலை ஆகிய மாதங்களுக்கான, இடைக்காலக் கொடுப்பனவை வழங்குவதற்கே இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்று முதலாளிமார் சம்மேளனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 100 ரூபாயை வழங்கும் பொருட்டே 800 மில்லியன் ரூபாய் கடனாகப் பெறப்படவுள்ளது. இந்த நிதியைக் கொண்டு ஏறத்தாழ, 200,000 வரையான பணியாட் தொகுதிக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
ஜூன் மாதத்துக்கான இடைக்கால கொடுப்பனவை துரித கதியில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஜூலை மாதத்துக்கான இடைக்கால கொடுப்பனவு, ஓகஸ்ட் மாத சம்பளத்துடன் ஓகஸ்ட் 10ஆம் திகதி வழங்கப்படவுள்ளது என்றும் முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது,
9 hours ago
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Mar 2026