Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஜூலை 19 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன், ஆர்.ரமேஸ், எஸ்.கணேசன்
முறையான சம்பளமின்மையால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், தோட்டங்களைவிட்டு வெளியேறி நகர்புறங்களுக்கு தொழில்வாய்ப்புத் தேடிச் செல்லும் நிலைமை மலையகத்தில் தற்போது அதிகரித்துள்ளதாகவும் இந்நிலை தொடர்ந்தால் தேயிலை தொழிற்றுறை வீழ்ச்சியடைந்து நாட்டின் தேசிய வருவாயும் பாதிப்படையும் எனவும் சர்வோதைய அமைப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இழுபறி நிலையிலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு தீர்வுக் காண வேண்டுமெனக்கோரி, சர்வோதையா அமைப்பினரின் ஏற்பாட்டில் கொட்டகலையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை அமைதிப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே சர்வோதைய அமைப்பினர் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். இங்கு தொடர்ந்தும் கருத்துரை அவர்கள், ' 1,000 ரூபாய் சம்பளம் என்ற நிர்ணயத் தொகையை நிராகரித்து பேச்சுவார்த்தையினூடாக ஓர் இணக்கப்பாட்டுத் தொகையை பெற்றுக் கொடுத்து சம்பள உயர்வு பிரச்சினையை உடனடியாக தீர்க்க தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் முன்வரவேண்டும். சம்பள உயர்வின்றி தொழிலாளர் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளதுடன் பிள்ளைகளின் கல்வியும் பாதிப்படைந்துள்ளது.
தோட்டங்களில் தொழில்புரிவோர் நகர்புரங்களுக்கு வெளியேறுகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் தேயிலை தொழிற்றுறை வீழ்சியடைந்து நாட்டின் தேசிய வருவாயும் பாதிப்படையும். சம்பள பேச்சுவார்த்தைக்கு சிவில் அமைப்புகள் தயாராக உள்ளோம். தொழிற்சங்க சுயநலனுக்காகவே சம்மள பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்படுகின்றது' என கூறினர்.
'எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வில் உடனடியாக தலையிட்டு சுமூகமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்' என அவர்கள் கோரினர்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகள் மாவட்ட ரீதியாக முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் மேலும் கூறினர்.
27 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago