2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல்கால வாக்குறுதிகள் தொடர்பில் சிவில் சமூகம் அவதானிக்க வேண்டும்

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.புஸ்பராஜ்

அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் வாக்குறுதிகள் வழங்குவதும் அதன் பின்னர் அதனை மறந்து விடுவதுமே சாதாரண நடைமுறையாகும். எனவே, அரசியல்வாதிகள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளை  நிறைவேற்றுகிறார்களா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு சிவில் சமூகத்துக்கு உரியது என பிரிடோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மலையத்தின் தலைமைத்துவத்தை ஏற்றிருக்கும் புதிய தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,   

'இதுவரை மலையகத்தில் தலைவர்களாக தங்களை காட்டிக்கொண்டவர்கள் மக்கள் கருத்துக்களை கேட்காதவர்களாகவும்  சிவில் சமூகத்தின் கருத்துக்களை மதிக்காதவர்களாகவுமே  இருந்திருக்கின்றனர். அத்தோடு தங்கள் கருத்துக்களையும் திட்டங்களையும் மக்கள் மீது பலவந்தமாக திணிப்பவர்களாகவே இருந்திருக்கின்றனர். அதனாலேயே மக்கள் அவர்களை நிராகரித்த விட்டனர்.  

தற்போது திகாம்பரம், இராதாகிருஸ்ணன், மனோகனேஷன் ஆகியோரின் தலைமையில் மலையத்தில் புதிய தலைமை உருவாகியுள்ளது. இவர்கள் மக்கள் கருத்துக்களை கேட்பவர்களாகவும் சிவில் சமூகத்தின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற எண்ணம் மலைய சமூகத்தில் ஏற்பட்டு வருகிறது.

இது ஒரு புதிய அரசியல் கலாசாரம்.  தலைவர்களை மாலை, மரியாதைகள் பொன்னாடைகள் போர்த்தி கௌரவப்படுத்தி மக்களிடம் இருந்து தலைவர்களை அந்நியப்படுத்தும் நடைமுறையை கைவிட்டு, அரசியல் தலைவர்கள் மக்கள் சேவகர்கள் என்ற கருத்தை சமூகமயப்படுத்தும் அணுகுமுறையை கையாள வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .