Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 24 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
2015ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் மலையக வீடமைப்பிற்கான நிதியொதுக்கீடு போதுமானதல்ல. இதனை மலையக முற்போக்கு கூட்டணியினர் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப் போகின்றார்கள் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
தேர்தலுக்கு முன்பாக புதிய அரசாங்கத்தில் 50,000 வீடுகளை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுத்தருவதாக மலையக கூட்டணியினர் உறுதியளித்திருந்தார்கள். இதனை தேர்தல் மேடைகளில் இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதிபடுத்தியிருந்தார். மலையக மக்களும் இந்த வீடு பிரச்சினைக்காகவே அதி கூடிய வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கியிருந்தார்கள்.
இருப்பினும், இவ்வரவு-செலவுத்திட்டத்தில் வெறும் 1,000 மில்லியன் ரூபாயே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 50,000 வீடுகளை 5 வருடங்களில் கட்டுவதாயின் வருடத்துக்கு 10,000 வீடுகளை கட்டி முடிக்க வேண்டும்.
சாதாரணமாக ஒரு வீட்டை கட்டுவதற்கு குறைந்த பட்சம் ஒரு மில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது. ஆகவே, ஒதுக்கப்பட்ட 1,000 மில்லியன் ரூபாய்களில் 1,000 வீடுகள் தான் ஒரு வருடத்தில் கட்டி முடிக்கக் கூடியதாகவுள்ளது.
இவ்வாறாறின் 05 வருடங்களில் 5,000 வீடுகளே கட்டி முடிக்கப்படும். ஏற்கெனவே 5,000 வீடுகளை இந்திய அரசாங்கத்தினூடாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக் கொடுத்துள்ளது.
இவ் வரவு-செலவுத்திட்டத்தினூடாக மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் வெறும் கண்துடைப்பாகவே தெரிகிறது.
மேலும், நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு - செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஏனைய விடயங்களும் நடைமுறைக்கு சாத்தியமற்றதாகத் தெரிகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
31 minute ago