2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

நான்கு மாதங்களாக வீட்டுக்குள் நிலைகொண்டுள்ள 'பெக்கோ'

Sudharshini   / 2016 மார்ச் 29 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஞ்சன குமார ஆரியதாஸ

மாத்தளை, பல்லேபொலவிலுள்ள வீடொன்றின் மீது, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விழுந்த பெக்கோ இயந்திரம், இதுவரை அப்புறப்படுத்தப்படாமல் உள்ளதனால், பாதிக்கப்பட்ட குடும்பம் தொடர்ந்து, பிரதேச நூலகத்திலே தங்கியுள்ளதாக தெரியவருகின்றது. 

பல்லோபொல பிரதேச செயலகத்துக்கு சொந்தமான பெக்கோ இயந்திரமானது கடந்த டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி, மேற்படி வீதி வழியாக பயணிக்கும்போது கொப்பே வெஹெரவிலுள்ள வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.இவ்விபத்தில் வீடு முற்றாக சேதமடைந்ததுடன் வீட்டிலிருந்த 3 சிறுவர்களும் சிறுவர்களின் தாயாரும் தெய்வாதீனமாக உயிர்த்தப்பினர். 

இச்சம்பவம் நடைபெற்று நான்கு மாதங்களாகின்ற போதிலும் இதுவரை பெக்கோ இயந்திரம் அப்புறப்படுத்தப்படாமல் அவ்விடத்திலேயே உள்ளது. 

இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பம் தொடர்ந்தும் பிரதேச நூலகத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாகவும் இதற்கு பிரதேச செயலகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .