2021 மே 18, செவ்வாய்க்கிழமை

நாவுல தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை

Princiya Dixci   / 2015 நவம்பர் 18 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சாமிவேல் சுதர்ஷினி

மாத்தளை மாவட்டத்தில், நாவுல கல்வி வலயத்துக்குட்பட்ட நாவுல தமிழ் வித்தியாலயத்தில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாவுல கல்வி வலயத்துக்குட்பட்ட நாவுல தமிழ் வித்தியாலயத்தில் தரம் 1 தொடக்கம் 9 வரை வகுப்புக்கள் உள்ள போதும், அங்கு 5 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டுள்ளதால் மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

110 மாணவர்கள் கல்வி பயிலும் இப்பாடசாலையில், முக்கிய பாடங்களான கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாமையால் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.  

எனினும், ஹப்புகஸ்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தில் 40 மாணவர்களுக்கு 12 ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். 

எனவே, சேவையை கருத்திற்கொண்டு ஹப்புகஸ்பிட்டிய தமிழ் வித்தியாலய ஆசிரியர்களை, வாரத்துக்கு இரண்டு நாட்கள் நாவுல தமிழ் வித்தியாலயத்துக்கு அனுப்பி  கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுத்த கல்வி திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .