2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

புகையிரதத்தில் மோதி இளைஞன் பலி

மொஹொமட் ஆஸிக்   / 2019 நவம்பர் 21 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி - மாத்தளை புகையிரதத்தில் மோதுண்டு, 17 வயது இளைஞனொருவன் உயிரிழந்துள்ளார் என, கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (20) மாலை, மஹியாவை, நித்தவல சந்திக்கு மேல் பகுதியிலேயே,  இந்த சம்பவம் இடம்பெற்றது.

குறித்த இளைஞனை அடையாளம் காண்பதற்கு, எந்தவொரு த​டயமும் கிடைக்கவில்லை என்றும் கறுப்பு நிற பணப்பை ஒன்று மாத்திரமே, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றது என்றும் தெரியவருகின்றது.

எனவே, 17 வயது சிறுவன் காணாமல் ​போன சம்பவங்கள் பதிவாகியிருப்பின், கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்துக்கு  அறிவிக்குமாறு, பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .