Kogilavani / 2016 ஜூலை 29 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பசறை மற்றும் லுணுகலை பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய, 1,500 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கிட்டுள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க குறிப்பிட்டார்.
பசறை பொது வர்த்தக நிலையத்தொகுதிக்கு ஆறு கோடி ரூபாயும், பசறை பொதுமயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்காக அமைக்கப்படவுள்ள கட்டடத்துக்கு மூன்று கோடி ரூபாயும், கழிவுகளை கொண்டுச் செல்ல பயன்படுத்தும் 'கலி' பவுசருக்கு தொன்னூறு இலட்சம் ரூபாயையும் விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.
பசறைத் தொகுதி அபிவிருத்தி இணைப்புக்குழுக் கூட்டம், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் ஆகியோரின் இணைத்தலைமையில், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (27) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரைத்த அவர்,
'பசறை பெருந்தோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மலசலகூட வசதியில்லாத தொழிலாளர் குடியிருப்பு தொடர்பில் அதிகாரிகள் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்பட்சத்தில் அதற்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும்' என கூறினார்.
அத்துடன், 'பசறை நகரை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பாரிய பொறுப்பு, பசறை பிரதேச சபையைச் சார்ந்ததாகும். பசறை மட்டுமன்றி ஊவா மாகாணத்தின் பெருமளவிலான தோட்டங்களை அண்மித்துள்ள பிரதேசங்களின் நீரோடைகளில் மனிதக் கழிவுகள், கிருமிநாசினிகள் கலக்கப்படுவதால் நீர் மாசடைகின்றது. இதனைத் தடுக்க பொது வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டியுள்ளது' என்றார்.
28 Oct 2025
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Oct 2025
28 Oct 2025