2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

பூஜாபிட்டிய பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றம்

மொஹொமட் ஆஸிக்   / 2019 நவம்பர் 26 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூஜாபிட்டிய பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீடு, இன்று (26), ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

பூஜாபிட்டிய பிரதேச சபையின் அமர்வு, இன்று (26), சபைத் தவிசாளர் அநுர பெர்ணான்டோ தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, சபைத் தவிசாளரால் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சயைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள்,​ ம.வி.முவைச் சேர்ந்த ஓர் உறுப்பினர், ஸ்ரீ.ல.மு.காவைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் உள்ளிட்ட மொத்தம் 26 உறுப்பினர்களின் எதிர்ப்புகள் இன்றி, பாதீடு நிறைவேற்றப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் எஸ்.எம். கலீல், இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள பாதீடு மூலம், நல்லதொரு சேவையை வழங்க முடியுமென நம்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில், தன்னுடைய பூரண ஆதரவை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .