Editorial / 2018 ஓகஸ்ட் 19 , பி.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விவரங்களை, உடனடியாகக் கல்வி அமைச்சுக்கு அறியத்தருமாறு, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், சம்பந்தப்பட்டவர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பு, வெள்ளவத்தையில், நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்துரைத்த அவர், நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற வானிலை காரணமாக, பல பாடசாலைகள் அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ள போதிலும், தற்போது பாடசாலை விடுமுறைக் காலம் பாதிப்புக்குள்ளான பாடசாலையின் விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதெனவும் தெரிவித்தார்.
எனவே, பாடசாலையின் அதிபர்கள், தமது பாடசாலைகளுக்குச் சென்று, பாடசாலைகளின் நிலைமைகளை ஆராயுமாறும், பாடசாலைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அது குறித்து, உடனடியாகக் கல்வி அமைச்சுக்கும் தனக்கும் அறிவிக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
இவ்வாறு அறியத்தரும்பட்சத்தில், பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, பாடசாலைகளை மீளப் புனரமைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும் கல்வி பொதுத்தர உயர்தரப் பரீட்சை நடைபெறும் மத்திய நிலையங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், பரீட்சை நிலையத்தில் கடமையிலுள்ளோர், பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக, கல்வி அமைச்சுக்கு அறியத்தருமாறும் அவர் கோரினார்.
50 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
5 hours ago