ஆ.ரமேஸ் / 2020 ஜனவரி 10 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ், நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் 304 தனி வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இம்மாதம் 30ஆம் திகதி காலை நடைபெறும் என, நுவரெலியா பிரதேச சபைத் தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.
நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த சபைக் கூட்டம், நானு-ஓயா தலைமை காரியாலய புதியக் கூட்ட மண்டபத்தில், தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில், நடைபெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஹப்புத்தளை விமான விபத்து, பதுளை - மடுல்சீமை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் ஆரம்பிக்கப்பட்ட கூட்டத்தில், தனிப்பட்ட பிரேரணையை சபையில முன்வைத்து தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் இந்நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும், எந்தவொரு கட்சி பேதங்களும் இன்றி கலந்துகொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
இதேவேளை, நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்காக, சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், 40 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிதியின் மூலம், பொங்கல் தினத்தில் இருந்து (15), அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
24 minute ago
34 minute ago
48 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
48 minute ago
53 minute ago