Kogilavani / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை மாவட்டத்திலுள்ள மொத்த நிலப்பரப்பில், 66.91 சதவீதமானவை, மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக, பதுளை மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி தெரிவித்தார்.
பதுளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற, அனர்த்த முகாமைத்துவக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,
"மொத்த பூமியில், 79.32 சதுரகிலோ மீற்றர், மிகுந்த அவதானத்துக்கு உட்பட்ட பிரதேசமாகக் காணப்படுகின்றது. இது 2.77 சதவீதமாகும். அத்துடன், 467.9 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பு, நடுத்தர ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. இது 47.76 சதவீதமாகும். மேலும், 1,369.19 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு, குறைந்தளவிலான ஆபத்தைக் கொண்ட பிரதேசமாகும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.
"பதுளை மாவட்டத்தில், மண்சரிவு அபாயமற்ற பகுதியாக, மொத்த பூமியில், 942.92 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பு அடையாளங்காணப்பட்டுள்ளது. இது, 32.93 சதவீதமாகும்.
மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள பகுதிகளை, எல்லை நிர்ணயம் செய்வதற்கு, கட்டட ஆராய்ச்சி நிலையம், நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் தொடர்பிலான தகவல்கள், கிராம செயலாளருக்கூடாக பிரதேசசெயலகத்துக்கு வழங்கப்பட வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது. ஆனால், இத்தகவல்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது" என அவர் மேலும் கூறினார்.
மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளுக்குச் சென்று, மக்களிடம் தகவல்களை பெற முயலும்போது, அங்குள்ள மக்கள் அச்சத்துடனயே பதிலளிக்கின்றனர். இதன் காரணமாகவே, மேற்படி தகவல்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக, கிராம சேவையாளர்கள், பிரதேச செயலாளரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
5 minute ago
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
5 hours ago
7 hours ago
8 hours ago