2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

பல்கலை மாணவர்கள் 9 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்

Editorial   / 2020 ஜனவரி 17 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத். எச்.எம்.ஹேவா

தலவாக்கலை- கிரேட்வெஸ்டன் ம​லைப் பிரதேசத்தைப் பார்வையிடச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி, லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  மாணவர்கள் சிலர் தமது கல்வி நடவடிக்கைகளுக்காக நேற்று (16) மாலை கிரேட்​வெஸ்டன் மலைப் பிரதேசத்துக்குச் சென்ற போதே, குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 பேரில் இருவர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதுடன் ஏனைய 7 பேரும் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .