2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

பலாங்கொடையில் சரும நோய் பரவும் அபாயம்

Editorial   / 2019 நவம்பர் 27 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை பிரதேசத்தில், ஒருவகை சரும நோய் பரவி வருவதாக, பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள், பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

பலாங்கொடை பிரதேசத்தில், இதுபோன்ற நோய் பரவுவது, இதுவே முதல் தடவை என்பதால், இவ்விடயத்தில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு அங்கமாக, குறித்த பகுதியிலுள்ள வீடுகளுக்குச் செல்லும் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள், விரைவில் குணமடையாத புண்கள், குஷ்டம் உள்ளிட்ட சருமப் பிரச்சினைகள் உள்ளவர்கள், உடனடியாக பலாங்கொடை அரச வைத்தியசாலையின் சரும நோய் விசேட வைத்தியரை நாடி சிகிச்சைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .