2021 ஜனவரி 16, சனிக்கிழமை

’பொலிஸ் விசேட படையணி முகாம் மீண்டும் வேண்டும்’

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை மாவட்டத்தின் தெரிணியகல- நூரி ​​தோட்டத்துக்கு மீண்டும் பொலிஸ் விசேட படையணி முகாமை அமைக்குமாறு நூரி தோட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த தோட்டத்தைச் சேர்ந்த மக்களால் கையொப்பமிடப்பட்ட கடிதமொன்று  ஜனாதிபதி செயலாளருக்கு இன்று (21) அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தெரணியகல பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அத்தகொட்டவினால் அட்டூழியங்கள் பல நடத்தப்பட்ட இடமான நூரி தோட்டத்தில், பல வருடங்களுக்கு முன்னர், அத்தகொட்டவுக்கு மரணத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்னர், அந்தத் தோட்டத்தில் நடைபெற்ற பல மோசமான சம்பவங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தல் நிறைவுற்றதன் பின்னர், மீண்டும் அத்தகொட்டாவின் அடியாட்களால் பல பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கியுள்ளதென நூரி தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே எமக்கு வாழ்வதற்கான உரிமையை மீண்டும் பெற்றுக்கொடுக்குமாறும் அதற்காக குறித்த பிரதேசத்தில் பொலிஸ் விசேட படையணி முகாமை அமைக்குமாறும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .