2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

பழனி சசிகுமார் சிங்கபூர் பயணம்

Niroshini   / 2016 ஜூலை 20 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் பழனி சசிகுமார், இளைஞர் தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக நாளை சிங்கபூர் பயணமாகவுள்ளார்.

இ.தொ.கா பொதுசெயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் சிபாரிசின் பேரிலேயே அவர் சிங்கபூருக்கு பயணமாகவுள்ளார்.

ஆசிய பசுபிக் பிராந்திய சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம் நடத்தும் 'தொழிலாளர்களின் சக்தியை கட்டியெழுப்புவதற்கான வழி ஐக்கியத்தை ஏற்படுத்துவதே' எனும் இளைஞர் தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கு எதிர்வரும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் 29ஆம் திகதி வரை சிங்கபூரில் நடைபெறவுள்ளது.

இதில் கலந்துக்கொள்வதற்காகவே இவர் பயணமாகவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .