2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பாடசாலைக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தல்

Kogilavani   / 2015 நவம்பர் 20 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலி

தைபா மற்றும் கல்வி சமூக நல அமைப்பின் நீர் விநியோகத் திட்டத்தின் கீழ் மாவனல்லை கல்வி வலயத்துக்கு உட்பட்ட பஹல தம்போவிட்ட சிங்கள ஆரம்ப பாடசாலைக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவிலுள்ள செல்வந்தர் ஒருவரின் நிதியுதவியில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு, புதன்கிழமை(18) பாடசாலை அதிபர் எச்.கே.எஸ்.சீ.சுகததாச தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், தைபா மற்றும் கல்வி சமூக நல அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஜே.ரிஸ்வான், மானவல்லை கல்வி வலயதின் அதிகாரி எம்.எம்.எஸ்.பீ.மெகசூரிய உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X