2021 மார்ச் 01, திங்கட்கிழமை

பெண் மீது துஷ்பிரயோக முயற்சி: நபருக்கு சிறை

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சி.எம். ரிஃபாத்

கலேவெல,  மொரக்கொல்ல பிரதேசத்தில், பெண்ணொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற நபருக்கு, தம்புளை நீதவான் நீதிமன்ற நீதவான் சஞ்சீவ ரம்யசிறி,  புதன்கிழமை (26), ஒன்பது மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

பெண், வீட்டில் தனியாக இருந்த போது, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார் என மேற்படி நபர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேக நபரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் பெண்ணை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயன்றமை ஆகிய இரு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டமைக்கு இணங்க இந்நபருக்கு 9 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .