2021 மே 12, புதன்கிழமை

பாதையை புனரமைத்து தருமாறு கோரிக்கை

Kogilavani   / 2016 ஜூலை 28 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்

அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலைக்குச் செல்லும் பிரதான வீதி, கடந்த 10 வருடங்களாக புனரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுவதாகவும் இதனை புனரமைத்துத்தர உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

திடீர் விபத்துகள் மற்றும் அவசர நிலமைகளின் போது இவ்வீதியால் வாகனங்களில் பயணிக்க முடியாத நிலைக் காணப்படுவதாகவும் வாகன சாரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்விடயம் நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் உப-தலைவர் சச்சிதானந்தனின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து,  அவரது முயற்சியால், பெக்கோ இயந்திரம் கொண்டுவரப்பட்டு வீதியில் காணப்பட்ட பாரிய குழிகள் மண்போட்டு நிரப்பப்பட்டன. எனினும், இப்பாதையை முழுமையாக புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .