2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

பெரட்டுக்களத்தில் வடிவேல் எம்.பி

Kogilavani   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், அறிவித்ததைப் போன்று, கந்தப்பளை பாக்கு தோட்ட பெரட்டுக்களத்துக்கு, இன்று காலை விஜயம் மேற்கொண்டதுடன், தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றிய அவர்,

'தோட்ட நிர்வாகத்தின் செயற்பாட்டைக் கண்டித்து கந்தப்பளைக்கு உட்பட்ட மூன்று பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 11 நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கலந்துரையாடலை மேற்கொள்ளும் நோக்கில், தோட்ட முகாமையாளரை இன்று (நேற்று 19) சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன். அதன் காரணமாகவே, நானும் பாக்குத் தோட்டத்துக்கு காலையிலேயே வந்துவிட்டேன். ஆனால், தோட்ட முகாமையாளர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. எனவே, தொழிலாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--