2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

பொறுப்பாக நடக்கவில்லை

Kogilavani   / 2015 நவம்பர் 17 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

 

'முன்னாள் அமைச்சர் திலக் மாரப்பன, சர்ச்சைக்குரிய  நல்லாட்சி அரசாங்கத்தில் பொறுப்பாக நடந்துகொண்டார் என்று கூறமுடியாது' என பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

முன்னாள் சட்டமும் ஒழுங்கும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன, தன்விருப்பின் பேரில் அல்லாமல் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்கவே இராஜினாமா செய்துகொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஹட்டன் - கினிகத்தேனையில் திங்கட்கிழமை(16) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'அமைச்சரவை அமைச்சராக இருந்துகொண்டு அவன்ட் காட் நிறுவனத்துக்கு சட்ட ஆலோசகராக கடமையாற்றிய அவரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதியும் பிரதமரும் கேட்டுக்கொண்டார்கள். இதற்கமையவே அவர் இராஜினாமா செய்துகொண்டார்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X