2021 மே 10, திங்கட்கிழமை

பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்

Kogilavani   / 2015 நவம்பர் 16 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடமை நேரத்தில் மதுபானம் அருந்திய குற்றச்சாட்டில் கைதான கேகாலை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்த இரு பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் அலுவலகரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி இருவரும் கொழும்பு – கண்டி பிரதான வீதி, மொலகொட மற்றும் கரடுபன பகுதிகளுக்கு இடையில் உள்ள எரிபொருள் நிலையத்துக்கு அருகில் வைத்து, மதுபானம் அருந்திய நிலையில் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் மதுபானம் அருந்திவிட்டு கடமையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, இவர்களை பொலிஸார் நேற்று முன்தினம் கைதுசெய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X