Kogilavani / 2017 மே 29 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}



எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன்
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி, குயில்வத்தை எனுமிடத்தில், சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து, இன்றுப் பகல் விபத்துக்குள்ளானது.
இதில், முச்சக்கர வண்டியின் சாரதி படுங்காயங்களுக்குள்ளான நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டவளையிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் மீது, கனரக வாகனம் ஒன்று மோதியதில், முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
18 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
41 minute ago
1 hours ago