Editorial / 2020 மார்ச் 13 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
சிவில் பொலிஸார் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு, இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹைபொரஸ்ட் பகுதியில், வாகனங்களை மறித்து பரிசோதனைக்கு உட்படுத்தி பணம் வசூலித்த மூவரில் இருவரை, இராகலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மூன்றாம் நபர் தப்பிஓடியுள்ளார் என்றும் அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள நபர்களில் ஒருவர் இராணுவத்திலிருந்தவர் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
ஓட்டோ ஒன்றை சோதனையிட்ட மேற்படிக் குழுவினர், ஓட்டோ பல்வேறு குறைபாடுகளுடன் உள்ளதாகவும் எனவே வழக்குத்தாக்கல் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். வழக்குத்தாக்கல் செய்யாது இருப்பதற்காக, 800/ ரூபாயை இலஞ்சமாக பெற்றுள்ளனர்.
அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட சிலர், இது குறித்து இராகலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று நகருக்கு விரைந்த பொலிஸார், அந்நபர்களை விசாரணைக்கு உட்படுத்தியபோது அவர்களில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
இருவரைக் கைதுசெய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago