2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

“மண்சரிவு அபாயமெனில் அறிவிக்கவும்”

Editorial   / 2017 ஜூன் 05 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரமேஸ்

நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக கிராம சேவகருக்கு  அறிவிக்குமாறு, நுவரெலியா இடர்முகாமைத்துவ தலைமை அலுவலக உயரதிகாரி எம்.பண்டார மக்களிடம் கோரியுள்ளார்.

தமது பிரதேசங்களில் ஏற்படக்கூடிய அபாயம் தொடர்பில், முன்கூட்டியே கிராமசேவகருக்கு அறிவித்துவிட்டால், அனர்த்தங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென்றும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில், நுவரெலியா மாவட்டத்தில் ஏற்படவுள்ள அனர்த்தங்களை தடுக்கும் நோக்கில்,   நுவரெலியா இடர் முகாமைத்துவ பிரிவு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது என்றும் அவர் கூறினார்.

இதற்காக, நுவரெலியா மாட்டத்தில் தகவல் அறியும் குழுக்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்களும் தகவலை சரியாக வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .