2021 மார்ச் 04, வியாழக்கிழமை

மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி

Kogilavani   / 2016 மே 20 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்,

கண்டி, கடுகன்னாவ இலுக்வத்தை ரம்மலக்கப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிப்புக்குள்ளாகிள்ள  குடும்பங்களுக்கு  சிவன் பவுண்டேசன் அமைப்பினால் ரம்மலக்க தைக்கா பள்ளிவாசலில் வைத்து  நிதிவுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிவன் அறக்கட்டளை நிதியத்தின் தலைவர் கணேஷ்வரன் வேலாயுதம்  நிதி உதவிகளை வழங்கி வைத்தார்.
இம்மண்சரிவினால் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கும் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு 10000 ரூபாயும் ஏனையோருக்கு 5000 ரூபாய் வீதமும் வழங்கப்பட்டன.

இந்த மண்சாரிவின் காரணமாக 6 பேர் மண்ணுள் புதையுண்டதுடன் 350 இற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .