Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 மார்ச் 09 , மு.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ, மொஹெமட் ஆஸிக், செ.தி.பெருமாள்,கு.புஸ்பராஜா
மத்திய மாகாணத்தில் நிலவி வரும் கடும் வரட்சியான காலநிலைக் காரணமாக, மலையக மக்கள் பல பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 18.4 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், பண்டாரவளையில் 20.5, பதுளையில் 20.8, மாத்தளையில் 29, மொனராகலையில் 26.5, கட்டுகஸ்தோட்டையில் 25.4 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி மாவட்டங்களில் நீடித்து வரும் அதிக வெப்பம் காரணமாக நீர்நிலைகள் வற்றியுள்ளதுடன் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக மக்கள் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதாக அங்கலாய்க்கின்றனர். சில பிரதேசங்களில் பொதுவான குடிநீரை கட்டுப்படுத்தி, ஹோட்டல்களுக்கு பெற்றுக்கொள்வதால் தாம் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, கட்டுப்படுத்தப்படும் பொதுக்குடிநீரை திறந்துவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால் மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையும் அறிவித்துள்ளது. இதேவேளை, நீர்நிலைகளுக்கு அருகில் காணப்படும் காடுகள், தொடர்ச்சியாக தீக்கிரையாகி வருவதால் நீர் மட்டம் குறைவடைந்து செல்வதாக சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, காடுகளுக்கு தீமூட்டும் செயற்பாட்டை தவிர்த்துக்கொள்ளுமாறு சூழலியலாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அதிக வெப்பநிலை மட்டும் பனிக் காரணமாக தேயிலை வளர்ச்சி குறைவடைந்துள்ளதால்; தோட்டத் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைந்துள்ளதாகவும் இதனால் தாம் பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து நீடிக்கும் வெயில் காலநிலை காரணமாக உப்பு பனி பொழிவு ஏற்படுமோ என தாம் அச்சம்கொண்டுள்ளதாகவும் இவ்வாறு உப்பு பனி பெய்தால் தேயிலை தளிர்கள் கருகிவிடுவதுடன் இது பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தொழிலாளர்கள் அச்சம்கொண்டுள்ளனர்.
மேலும், மத்திய மாகாண விவசாயிகள் மேற்கொண்ட பயிர்ச்செய்ககைகள் அனைத்தும் பாதிப்படைந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில், நேற்று மலையகத்தின் சில பகுதிகளிலில் சிறிய அளவில் மழை பெய்துள்ளதாக தெரியவருகிறது.
40 minute ago
1 hours ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
3 hours ago
9 hours ago