2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

மதிய உணவு வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜ்

ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து அரசாங்க  பாடசாலை மாணவர்களுக்கும் மதிய வேளை உணவு வழங்க ஊவா மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன் வெல தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்போது பதுளை, மொனராகலை மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள 2,500 மாணவர்களுக்கு மதிய வேளை உணவு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை ஊவா மாகாணம் முழுவதும் விஸ்தரிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளிலும் மதிய வேளை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊவா மாகாணத்தில் 2014ஆம் ஆண்டு கல்வி பொதுதராதர பரீட்சைக்கு தோற்றி 9 பாடங்களிலும் 'ஏ' சித்திப்பெற்ற 174 மாணவர்களக்கு கணினிகள் வழங்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .