Editorial / 2020 மார்ச் 15 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் கீழ் இயங்கும் மௌன்ஜீன் தோட்டத் தொழிலாளர்களுக்கு, மாதச் சம்பளம் முறையாக வழங்கப்படுவதில்லை என்று, தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இம்மாதம் 10ஆம் திகதி வழங்கப்பட வேண்டிய சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்றுத் தெரிவித்து, தோட்டத் தொழிற்சாலைக்கு முன்பாக வெள்ளிக்கிழமை(14) ஒன்றுகூடிய தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்தத் தொழிலாளர்கள், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் கீழ் இயங்கும் இந்தத் தோட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகச் சுட்டிகாட்டினர்.
ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் வழங்கப்பட வேண்டிய போனஸ் (ஊக்க தொகை) தொகையையும் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் மேலும் கோயிலுக்குவென மாதாந்தம் தொழிலாளர் சம்பளத்திலிருந்து அறவிடப்படும் தொகையையும் உரியவாறு கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்படுவதுமில்லை என்றும் தெரிவித்ததோடு இதன் காரணமாக தாம் பல்வேறு வகையில் அசௌகரியங்களைச் சந்திப்பதாக மக்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு 13ஆம் திகதி தமக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்தே, மௌன்ஜீன் தோட்ட நிர்வாகம் தமக்குரிய சம்பளத்தை வழங்கியதாக, தோட்ட மக்கள் தெரிவித்தனர்.
8 minute ago
17 minute ago
3 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
3 hours ago
27 Oct 2025