2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

மூன்றாவது வேட்பாளரை கூட்டணி திங்கட்கிழமை அறிவிக்கும்

Editorial   / 2020 மார்ச் 13 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

 

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பட்டியலில் தானும் திகாம்பரமும் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், மூன்றாவது வேட்பாளர் யார் என்பதை திங்கட்கிழமை அறிவிக்கவுள்ளதாக  மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ரணில் விக்கிமரசிங்க தலைமையிலான அணி, நுவரெலியா மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டால்கூட தமக்கு எவ்விதச் சவாலும் இல்லை என்றும், பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி நடைபோடும் என்றும் தெரிவித்தார்.

அற்புதராஜாவை பொதுச்செயலாளராகக் கொண்ட தேசிய மலையக முன்னணி, பொதுத் தேர்தலில், தனது ஆதரவை  தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு வழங்கவுள்ளது. இதனை அறிவிக்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு, இன்று (13) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,

தேசிய மலையக முன்னணி, இன்று தம்முடன் இணைந்துள்ளதாகவும் செயலாளர் அற்புதராஜா உள்ளிட்ட குழுவினரை முதலில் தாம் வரவேற்பதாகவும் தெரிவித்ததுடன், ஜனாதிபதித் தேர்தலின்போது, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கிய அக்கட்சி உறுப்பினர்கள், பொதுத்தேர்தலில் எதமக்கு நேசக்கரம் நீட்டியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில், தமக்கான அடித்தளம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் எனவே, ரணில் தரப்பு தனித்து களமிறங்கினால்கூட, அது தமக்கு சவாலாக அமையாது என்றும் தெரிவித்தார்.

கடந்தமுறை நுவரெலியா மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் முற்போக்குக் கூட்டணி கைப்பற்றியதாகவும் இம்முறையும் அந்தப் பெறுபேறுகளை பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

“எம்மால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எம்மை தெரிவுசெய்ய வேண்டும் என்றச் சிந்தனை, மக்கள் மனங்களிலும் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள 90 சதவீதமான உறுப்பினர்கள், சஜித்துடனேயே இருக்கின்றனர். எனவே, பெரும்பான்மையுடன் அவர் வெற்றிபெறுவார். ரணிலுடன் உள்ள பத்த பேர் வெற்றிபெறுவார்களா என்பது கேள்விக்குறியே” என்றார்.  

ஜனாதிபதித் தேர்தலின்போது, சஜித்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான ஆதரவை வழங்கியிருந்தால் அவர் வெற்றிபெற்றிருப்பார் என்ற எண்ணம் மக்கள் மனங்களில் இன்றளவிலும் உள்ளது என்றும் இதனால்தான் சஜித்தின் புதிய கட்சிக்கு அமோக ஆதரவை வழங்கியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X