Editorial / 2020 ஜனவரி 06 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-துவாரக்ஷான்
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம வெஸ்ட் 5 பிரிவு தோட்டத்தில் மரத்திலிருந்து தவறி விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (05) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டு தேவைக்கு விறகு வெட்டுவதற்காக 150 அடி உயரத்தில் உள்ள மரத்தில் ஏறி மரத்தின் கிளைகளை வெட்டும் போது குறித்த நபர் கால் தவறி விழுந்துள்ளார்.
48 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான ராமன் பாலசுப்பிரமணியம் என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளையும் தன்னுடன் அழைத்துச்சென்றுள்ளார்.
இவர்களை மரத்தின் அடிவாரத்தில் நிறுத்திவைத்து விட்டு மரத்தில் ஏறி கிளையை வெட்டிய சில நிமிடங்களில் கீழே விழுந்துள்ளதாக தெரியவருகின்றது.
இறந்தவரின் சடலம் டயகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025