2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

மலபத்தாவ மண்சரிவு; மீட்பு பணிகளில் இராணுவத்தினர்

Editorial   / 2019 டிசெம்பர் 01 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலப்பனை பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட  ஹங்குராங்கெத்த- வலப்பனை பிரதான வீதியில், நாகந்தலாவ - மலபத்தாவ எனுமிடத்தில், வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததால், இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.

நேற்று  (30) இரவு இடம்பெற்ற இவ் அனர்த்தத்தில்,  ஒரே குடும்பத்தை சேர்ந்த  நால்வரில் கருனாரத்ன வயது (16) என்ற சிறுவனின் சடலமும் மற்றொருவரின் சடலமுமே  மீட்கப்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மண்சரிவில்  சிக்குண்டு காணாமல்போன நபர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவ இடத்துக்கு  விரைந்த இராஜாங்க அமைச்சர் சீ. பி. ரத்னாயக்க, மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

-ஆ.ரமேஸ்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .