2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

மலையக மக்களை ’தனிவீடுகளில் குடியமர்த்த வேண்டும்’

Kogilavani   / 2017 ஜூலை 18 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. ஏனைய சமூகத்தினரை போன்று, மலையக மக்களையும் தனி வீடுகளில் குடியமர்த்த வேண்டும் என்பதே, அவ்வமைச்சின் நோக்கமாகும்' என்று, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.  

பதுளையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கூறிய அவர்,

'தற்போதைய நிலையில் இந்திய அரசும் மலையக மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அத்துடன், எமது அமைச்சினால் அமைக்கப்படும்  வீடுகளுடன் சேர்த்து, அதிக எண்ணிக்கையிலான வீடுகளை, மலையக மக்களுக்காக நிர்மாணிக்க முடியுமென்று எதிர்பார்க்கின்றோம். எமது அமைச்சர் பழனி திகாம்பரத்தின் எண்ணக்கருவும் இதுவேயாகும்.

வெகு விரைவில் ஏழு பேர்ச்சஸ் காணியுடனான வீட்டுரிமை பத்திரங்களை எமது மக்களுக்கு வழங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். எம்மை விமர்சனம் செய்துகொண்டிருப்பவர்கள் எமது வேலைத்திட்டங்களை நேரடியாக பார்க்கலாம்' என்றார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .