2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

மலையக மகளிர் முன்னணியின் மகளிர் தினம்

Gavitha   / 2016 மார்ச் 21 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணியின் அனுசரணையுடன் மலையக மகளிர் முன்னணியின் சர்வதேச மகளிர் தினம், நாளை செவ்வாய்க்கிழமை (22) காலை 10 மணிக்கு,  ஹட்டனிலுள்ள கிருஷ்ணபவன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் போஷகர் சாந்தினி சந்திரசேகரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளவுள்ளார்.

சிறப்பு அதிதிகளாக நிதிச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ.அரவிந்தகுமார், மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.இராஜாராம், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அ.லோரன்ஸ் ஆகியோரும் விசேட அதிதிகளாக மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் க.சுப்பிரமணியம், பிரதி செயலாளர்கள் உபதலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .