2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மலையக மக்களுக்கான காணி உரிமை: மாத்தளையில் நாளை கையெழுத்து வேட்டை

Gavitha   / 2016 ஜூலை 23 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

'பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான மக்கள் இயக்கம், மலையக மக்களுக்கான காணி உரிமையை வழங்கக் கோரி, ஒரு இலட்சம் கையொப்பங்களைத் திரட்டி ஜனாதிபதிக்கு வழங்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, நாளை ஞாயிற்றக்கிழமை (24) பிற்பகல் 1.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை மாத்தளை நகரில், கையெழுத்து வேட்டையொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது' என்று பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் எஸ்.டி.கணேசலிங்கம் தெரிவித்தார்.

மேற்படி நடவடிக்கையின் முன்னோடி நடவடிக்கையாக தோட்டங்கள் தோறும் பொது மக்களின் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, நகரங்களை இலக்கு வைத்து கையொப்பங்களை பெறும் நடவடிக்கையின் முதற்கட்டம் மாத்தளை நகரில் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .