2021 ஜனவரி 27, புதன்கிழமை

மஸ்கெலியாவில் அடிக்கடி மின்சாரத் தடை

செ.தி.பெருமாள்   / 2019 நவம்பர் 24 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட சாமிமலை, மஸ்கெலியா, நல்லதண்ணி ஆகிய பகுதிகளில், நேற்று (23) காலை முதல், அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டு வருவதாக, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மின்சாரம் அடிக்கடி தடைப்பட்டு வருவதால், குறித்த பகுதிகளிலுள்ள மக்கள் உள்ளிட்ட மாணவர்கள் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்விப்பொதுத் தராதர சாதாரணப் பரீட்சை டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்காக தயாராகும் மாணவர்கள், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மின்சாரம் தடைப்பட்ட பின்னர், மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்படும்போது, சில குடியிருப்புகளில் இருந்த சில இலத்திரனியல் உபகரணங்கள் சேதமடைந்துள்ளது என, பொதுமக்கள் தெரிவித்தனர்.

எனவே, இது குறித்து மஸ்கெலியா மின்சார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .