2021 மே 06, வியாழக்கிழமை

மாணவிகள் துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது

Kogilavani   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஷ்

மஸ்கெலியா பிரதேசத்துக்கு உட்பட்ட பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயின்றுவரும் 04 மாணவிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அப்பாடசாலையை சேர்ந்த ஆசிரியர் ஒருவரை மஸ்கொலிஸா பொலிஸார் நேற்று மாலை கைதுசெய்துள்ளனர்.

இவ் ஆசிரியர், பிரத்தியேக வகுப்புகளை வழங்குவதற்காக மேற்படி மாணவிகளின் வீடுகளுக்கு சென்று அம்மாணவிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக மாணவிகளின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்தே மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதானவரை இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பாதிக்கபட்ட மாணவிகள் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .