Kogilavani / 2016 ஜூலை 15 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

'பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணக் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ள 2,500 ரூபாய் கொடுப்பனவானது இரண்டு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை நியாயமானதா' என புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் மாத்தளை மாவட்ட செயலாளர் டேவிட் சுரேன் கேள்வியெழுப்பியுள்ளார்.
கூட்டுஒப்பந்தம் காலாவதியாகி ஒரு வருடமும் நான்கு மாதங்களும் கடந்துள்ள நிலையில் தொழிலாளி ஒருவருக்கு 1 இலட்சத்துக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,
'தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரத்தில், நல்லாட்சி அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களை பந்தாட தொடங்கி ஒரு வருடமும் நான்கு மாதங்களும் ஆகின்றன. 1000 ரூபா சம்பள கோரிக்கையை மறந்து செயற்படும் இ.தொ.கா, அமைச்சு பதவிக்காக தவமிருந்து வருகின்றது. திகாம்பரம் தரப்பினர் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்தால் மட்டுமே வீட்டுத்திட்டம் வரும் என்று கூறிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாளிமார் சம்மேளனம் 12 நாட்களுக்கு 720 ரூபாய் என சம்பள திட்டத்தை வெளிப்படுத்தி தொழிலாளர்களுக்கு எதிரானவர்கள் என நிரூபித்துவிட்டது.
ஒட்டுமொத்தத்தில் நல்லாட்சி அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் முதலாளிமாரும் இணைந்து தோட்டத் தொழிலாளர்களை உதைத்து விளையாடி வரும் போக்கே இடம்பெறுவதாகத் தெரிவித்த டேவிட் சுரேன், மலையகத்தின் காட்போட் தொழிற்சங்க தலைமைகளை நம்பாது தொழிலாளர்கள் களத்திலிறங்க வேண்டும்' என அழைப்பு விடுத்துள்ளார்.
17 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago