Kogilavani / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.எம்.ரம்ஸீன்
முன்னாள் அமைச்சர் அப்துல் காதரின் ஜனாஸா, இன்று மாலை 5 மணிக்கு கம்பளை நகர் பள்ளிவாயலில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
கடந்த சில வாரங்களாக சுகயீனமுற்றிருந்த இவர் கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி தனது 79 ஆவது வயதில் காலமானார்.
1988 ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்த அப்துல் காதர், 1988 ஆம் ஆண்டு மாகாண சபை உருவாக்கப்பட்ட போது முதல் முஸ்லிம் மாகாண அமைச்சராக மத்திய மாகாண சபையில் பதவி வகித்தார்.
அதனைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதுடன் பிரதியமைச்சராகவும் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அவர் கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில்; கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவரது ஜனாஸாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago