2021 ஜனவரி 23, சனிக்கிழமை

மும்முரமாக இருப்பேன்: அமைச்சர் திகா ஹட்டனில் சூளுரை

Kogilavani   / 2016 ஜூலை 11 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

ஜனாதிபதி, பிரதமரின் எதிர்பார்ப்புக்கிணங்க இனிவரும் காலங்களில் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களது குறைகளை தீர்க்கும் பணியை மும்முரமாக முன்னெடுக்கவுள்ளதாக மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

'வாக்களித்த மக்கள் என்னைத்  தேடிவருவதைவிட மக்களைத் தேடிச் சென்று அவர்களது குறைகளைக் கேட்டு, அவற்றுக்குத் தீர்வு வழங்குவதே மக்கள் சந்திப்பு வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்' என்றும் அவர் கூறினார்.

மக்கள் சந்திப்பு வேலைத்திட்டதின் முதலாவது நிகழ்வு, ஹட்டன்-டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர், 'எனது அமைச்சினூடாக கொழும்பில் அமைந்துள்ள எனது காரியாலயத்தில் புதன்கிழமை தோரும் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது, பலரது பிரச்சினைகளை தீர்த்து வைத்தேன். எனினும், தூர பிரதேசத்திலிருந்து வரும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். பொதுமக்களின் நலன்கருதி பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் மக்கள் சந்திப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் முதற்கட்டமாக   ஹட்டனில் ஆரம்பித்துள்ளேன்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எதிர்பார்ப்புகளும் மக்களிடம் சென்று மக்களின் குறைகளை கேட்டு சேவையாற்ற வேண்டும் என்பதே. தொடர்ந்து சகல பிரதேசங்களிலும் மாவட்டங்களிலும் இவ்வாறான மக்கள் சந்திப்பு வேலைதிட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்' என்றார்.

இச்சந்திப்பின்போது,  ஹட்டனுக்கு உட்பட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு நன்மையடைந்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .