2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

யட்டியாந்தோட்டை விவகாரம்: EU கண்காணிப்பாளர்கள் விஜயம்

பா.திருஞானம்   / 2019 நவம்பர் 21 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியில், கேகாலை மாவட்டத்துக்குட்ட யட்டியாந்தோட்டை, கனேபொல தோட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக கண்டறிவதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு குழுவொன்று. நேற்று (20) மாலை, குறித்தத் தோட்டத்துக்குச் சென்றிருந்தது.

இதன்போது, கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேராவின் பிரதிநிதிகளும் சென்றிருந்தனர்.

கடந்த 18ஆம் திகதி, குறித்த தோட்டத்துக்குள் நுழைந்த சிலர், யாருக்கு வாக்களித்தீர்கள் என்று வினவி, தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு, இரண்டு தரப்பினருக்கு இடையே சமரசம் செய்யப்பட்ட பின்னர், அவர் விடுத​லை செய்யப்பட்டார்.

இது தொடர்பில் ஆராயும் பொருட்டே, குறித்தக் குழுவினர், இத்தோட்டத்துக்கு விஜயம் செய்திருந்தனர்.

இதன்போது, கண்காணிப்புக் குழுவினர், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் கலந்துரையாடியதாகவும் அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்ததாகவும் தெரியவருகின்றது. அத்துடன், பாதிக்கப்பட்ட வீட்டில் சேதமடைந்த தொலைக்காட்சியும் மின்விசிறியும் மீண்டும் வழங்கப்பட்டமை தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு இனிமேல் எந்தவொரு சம்பவமும் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்பது தொடர்பாக இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது என்றும் இது தொடர்பில் தாங்கள் அவதானத்துடன் செயற்படுவதாகவும் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .