2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

யுவதி கடத்தி விடுவிப்பு

Kogilavani   / 2015 நவம்பர் 23 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அலவத்துகொடை, கோணகலை பிரதேசத்திலிருந்து முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த  26 வயதான யுவதியை வானில் வந்த ஐவரடங்கிய   குழு, கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் அலவத்துகொடை              பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இதற்காக விசேட பொலிஸ் குழுவையும் நியமித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

'மேற்படி யுவதி கடந்த 20ஆம் திகதி  முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த போது, திடீரென வந்த வானொன்று அம்முச்சக்கர வண்டியை இடை மறித்துள்ளது.

அந்த வானிலிருந்து இறங்கிய ஐவர், முச்சக்கரவண்டிக்குள் இருந்த யுவதியை இழுத்து வானில் ஏற்றிக்கொண்டுள்ளனர்.

இவர்கள் மறுநாள் 21ஆம் திகதி சனிக்கிழமை,  அந்த யுவதியை ஜீப் வண்டி ஒன்றில், ஏற்றிவந்து கடத்திய இடத்திலே விட்டுச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் யுவதி, அலவத்துகொடை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டனர்.

தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபர், யுவதியை திருமணம் செய்துக்கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும் அதற்கு யுவதி மறுப்பு தெரிவித்ததை அடுத்தே இக்கடத்தல்             

மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கடத்தியவர்கள் தம்புள்ளை, கண்டலம பிரதேசத்தில் தடுத்து வைத்ததாகவும் தன்னை மிரட்டித் திருமண ஒப்புதலை பெற்றுக்கொண்டு மீண்டும் கடத்திய இடத்திலே விட்டுச் சென்றதாகவும் அந்த யுவதி குறிப்பிட்டுள்ளார்.

கடத்தப்பட்ட யுவதியை வைத்திய பரிசோதனைகளுக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் சந்தேக நபர்களை கைது செய்வதற்காக விஷேட பொலிஸ் குழுவொன்றுறை நியமித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .