Sudharshini / 2015 நவம்பர் 23 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருண குமார
70 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2,000 ரூபாய் கொடுப்பனவு, நாவுல பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் உரிய காலப்பகுதியில் கிடைக்கப்பெறுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள வரும் வயோதிபர்கள், தமது சொந்த பணத்தை முச்சக்கர வண்டிக்கு செலவழித்து தபாலகத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாகவும் இதனால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாவுல பிரதேச சபைக்கு மட்டும்; சுமார் 6 இலட்சம் ரூபாய் நிதி ஓதுக்கப்படுகின்றது. எனினும் இக்கொடுப்பனவானது உரிய காலத்தில் கொடுத்து முடிக்காமையால், குறித்த நிதி மீண்டும் அரசாங்கத்துக்கே அனுப்பப்படுகின்றது.
இது குறித்து மாத்தளை பிரதேச செயலாளரிடம் வினவிய போது, நாவுல பிரதேசத்தில் மட்டும் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் உரியவர்களுக்கு முறையாக கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.
49 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago