Sudharshini / 2015 நவம்பர் 25 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜா
நுவரெலியா, லவர்ஸ் லீப் தோட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் 04 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதில் பாதிக்கப்பட்ட அக் குடும்பங்களையும் சேர்ந்த 24 பேரையும் தோட்ட ஆலயத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த லயன் தொகுதியானது ஏற்கெனவே வெடிப்புற்று காணப்பட்டதாகவும் எனினும், அது தொடர்பில் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையென பாதிக்கபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு 40 வருடங்களுக்கு முன்பு இக்குடியிருப்பு மாட்டு பட்டியாக இருந்ததாகவும் தோட்டத்தில் வீடுகள் இல்லாத காரணத்தினால், இவ்விடத்தை தமக்கு தோட்ட நிர்வாகம் வழங்கியதென அம்மக்கள் குறிப்பிட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் அம்மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago