2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

வீட்டில் பிரசவித்த சிசுவைப் புதைத்த பெண் கைது

சிவாணி ஸ்ரீ   / 2020 ஜனவரி 10 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி காங்கம, கொஸ்கல பிரதேசத்தில், தனக்குப் பிறந்த சிசுவை புதைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், 18 வயது பெண்ணொருவரை, இரத்தினபுரி பொலிஸார் நேற்று முன்தினம் (08) கைது செய்துள்ளனர்.  

இந்நிலையில், புதைக்கப்பட்ட சில நிமிடங்களில் மீட்கப்பட்ட சிசு, இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றது.  

இந்தச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.  

குறித்தப் பெண்ணுக்கு, செவ்வாய்க்கிழமை (07) இரவு வயிறு வலி ஏற்பட்டதாகவும் எனினும், தான் சிசுவொன்றை பிரசவிக்க இருந்தாலும் பிரசவத்துக்காக வைத்தியசாலைக்குச் செல்லாத பெண், நேற்று முன்தினம் (08) காலை 9 மணியளவில், வீட்டிலேயே சிசுவைப் பிரசவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.  

இந்நிலையில், தொப்புள்கொடியைக் கத்தியொன்றில் வெட்டியுள்ள அந்தப் பெண், பிறந்த சிசுவை, வீட்டுக்கு அருகில் அரை அடி குழியொன்றைத் தோண்டிப் புதைத்துள்ளார்.  

இந்நிலையில், இதைக் கண்ட அயலவர்கள், உடனடியாக சிசுவை மீட்டெடுத்து, பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார். 

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், குறித்தப் பெண்ணைக் கைது செய்து வைத்தியசாலையில் அனுமதித்ததோடு, சிசுவையும் வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  

இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிசு, சுகமடைந்து வருவதாகவும் இது தொடர்பில், சிசுவின் தாயாரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .