Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 22 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் பிரியாவிடை நிகழ்வு, பத்தரமுல்ல செத்சிறிபாயவில் அமைந்துள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கேட்பர் கூடத்தில், நேற்று (21) நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் உட்பட அமைச்சின் செயலாளர்கள், அமைச்சின் அனைத்துத் துறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த அமைச்சை முறையாக செயற்படுத்த எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். குறுகிய காலத்துக்குள் சேவை செய்யக்கூடிய வாய்ப்பு எனக்கு இந்த அமைச்சின் மூலமாகக் கிடைக்கப் பெற்றது” என்றார்.
“என் தொப்புள்கொடி உறவுகளோடு தொடர்புப்பட்ட ஓர் அமைச்சின் கீழ், நான் சேவயாற்ற முடிந்ததை நினைத்து மிகவும் பெருமிதம் அடைகின்றேன். ஆனாலும் தொடர்ச்சியாக எனது மக்களுக்கு சேவையாற்ற முடியவில்லை என்பது மாத்திரமே சிறு வருத்தத்தை அளிக்கின்றது.
ஆனாலும்கூட எனது பெருந்தோட்ட மக்களுக்காக இந்த அமைச்சின் மூலம் காணி உரிமை வழங்கும் செயற்றிட்டம், 50 ரூபாய் சம்பள பிரச்சினைக்குத் தீர்வாக 600 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றமை, சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு விவசாய உபகரணங்கள் பகிர்ந்தளிக்கக்கூடிய வேலைத்திட்டங்கள் போன்ற பல நலன்தரும் விசேட வேலைத்திட்டங்கள் அனைத்துமே இந்த அமைச்சின் அங்கிகாரத்துடன் முன்னெடுக்கப்பட்டதுடன் இவற்றில் பல விடயங்கள் குறிப்பாக பெருந்தோட்ட மக்களுக்கான விழிப்புணர்வு செயற்றிட்டம், மக்கள் நலன்பெரும் நடமாடும் சேவைகள் போன்றன வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
“தற்போது அமைச்சுப் பதவியிலிருந்து மாத்திரமே வெளியில் செல்கின்றேன் ஆனால் நிச்சயம் மக்கள் ஆசிர்வாதத்துடன் என் தொப்புள்கொடி உறவுகளுக்கு சேவையாற்ற வெகுவிரைவில் வருவேன்.
“நான் அமைச்சுப்பதவியில் இல்லாவிட்டாலும் எனது சொந்தங்களுக்கு என்றுமே ஒரு காவல்காரனாக நின்று அவர்களின் ஒவ்வொரு விடயத்திலும் துணைநின்று அவர்களைக் காத்து வழிநடத்துவதே எனது உன்னத நோக்கமாகும்” என்றும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago