2021 மார்ச் 01, திங்கட்கிழமை

விபத்தில் இராணுவ வீரர் பலி

Kogilavani   / 2017 ஜூலை 20 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

மஹியங்கனை, அழுத்தரமவில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில், தியத்தலாவை இராணுவ முகாமின் கெமுனுபிரிவில் கடமையாற்றி வந்த இராணுவ வீரரான சிறில் ராஜபக்ஷ (வயது 27) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி மற்றும் ஒரு வயது குழந்தை ஆகியோர், படுகாயமடைந்த நிலையில், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவ வீரர், தனது குடும்பத்தாருடன் பயணித்த முச்சக்கர வண்டி, எதிரேவந்த லொறியுடன் மோதியதில், இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

லொறியின் சாரதியை விசாரணைக்கு உட்படுத்திவரும் பொலிஸார், இச்சம்பவம், தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .