2021 ஜனவரி 27, புதன்கிழமை

விளையாட்டு மைதானங்கள் குத்தகைக்கு விடப்படுவதால் அவதி

Editorial   / 2019 நவம்பர் 08 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மலையகப் பகுதிகளில், பண்டிகைக் காலங்களில் பிரதேச சபையின் கீழ் காணப்படும் பொதுமைதானங்களை, களியாட்ட நிகழ்வுகளுக்கும் பொதுசந்தை அமைப்பதற்கும் குத்தகைக்கு விடுவதால், அப்பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று, விளையாட்டுக்கழங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும் தற்போது பாடசாலைகளுக்கு இடையிலான கடினபந்து சுற்றுப் போட்டிகள் இடம்பெற்று வருகின்றமையால் அப்பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள், உரிய பயிற்சியை இக்காலத்தில் பெற முடியாமையால் போட்டிகளில் சிறந்த ஆற்றலை வெளிகாட்ட முடியாமல் மாவட்ட அணிக்குத் தெரிவாகக் கூடிய திறமைகள் இருந்தும் பயிற்சியின்மையால் அவ்வாய்ப்புக் கிடைக்காமல் போகும் துர்பாக்கிய நிலை தோன்ற வாயப்புள்ளதாகக் குறிப்பிட்டனர்.

எனவே எதிர்காலத்தில் பிரதேச சபையின் வருமானத்துக்கு மாத்திரம் தமது கண்ணோட்டத்தை செலுத்தாமல், விளையாட்டு வீரர்களின் பக்கமும் தமது கண்ணோட்டத்தை செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .