2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

விபத்தில் தலை நசுங்கி பெண் பலி; சாரதி கைது

Kogilavani   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச, எம்.செல்வராஜா

பதுளை -ஹாலிஹெல மத்திய மகா வித்தியாலத்துக்கு அருகில், ஞாயிற்றுக்கிழமை இரவு  இடம்பெற்ற லொறி விபத்தில், பெண்ணொருவர், ஸ்தலத்திலே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஹாலிஹெலயிலிருந்து, பதுளைக்கு பயணத்த லொறியனாது, வீதியை விட்டு விலகிச் சென்று மேற்படி பாடசாலைக்கு அருகிலுள்ள மின்சார தூணில் மோதியுள்ளதுடன், பாடசாலையின் பாதுகாப்பு மதிலுக்கு கீழே படுத்துறங்கிக்கொண்டிருந்த பெண்ணின் மீதும் மோதி, தரித்து நின்றுள்ளது.

இச்சம்பவத்தில் பெண், தலை நசுங்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர், இதுவரை அடையாளங்காணப்படவில்லை எனவும், இவரது சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

சாரதியின் நித்திரைக்கலக்கமே இவ்விபத்துக்கு காரணமெனவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--